இந்தியாவிற்கு பாதிப்பு இல்லை.

pfizer-250_20112008

சர்வதேச நிதி குளறுபடிகளால் உற்பத்தித் துறைகளில் தேக்கம் ஏற்பட்டு உலக அளவில் வேலைவாய்ப்புகள் பறி போய்க் கொண்டிருந்தாலும் கூட இன்னொரு பக்கம் இந்தியாவில் இன்சூரன்ஸ், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சில ஐடி நிறுவனங்களும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இதன் மூலம் இந்தத் துறைகளில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.

மெட்லைப், மேக்ஸ் நியூயார்க் லைப், டாடா ஏஐஜி, பாரதி ஏஎஸ்ஏ, அவிவா ஆகிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அடு்த்த சில மாதங்களில் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளன.

இதன்மூலம் 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதுவரை எல்ஐசி மட்டுமே கொடி கட்டிப் பறந்து வந்த இந்தத் துறையில் தனியார் நிறுவனங்கள் மிக வலுவாகவே காலூன்றி வருகின்றன. இன்சூரன்ஸ் துறையில் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் 42 சதவீதத்தை எட்டியுள்ளது.

நிதி நெருக்கடியான சூழலிலும் எதிர்கால பாதுகாப்பு கருதி காப்பீட்டில் முதலீடு செய்வது குறையாது என இந்த நிறுவனங்கள் கருதுகின்றன. மாறாக எதிர்காலம் குறித்த ஸ்திரமற்ற சூழலால் காப்பீடுகளில் மக்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருவதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மேலும் கோடிக்கணக்கான மக்களை காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் கொண்டு வர இந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதற்காக தங்களது நிறுவனங்களை விரிவாக்கவுள்ளன.

இந்த வகையில் தான் இந்தத் துறையில் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.

அதே போல இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களும் ஊழியர்கள் சேர்ப்பதைக் கைவிடப் போவதில்லை என அறிவித்துள்ளன. குறி்ப்பாக டாடா கன்சன்டல்சி நிறுவனம் இந்த ஆண்டு 48,000 பேரை சேர்க்கவுள்ளதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதில் 35,000 பேரை நேரடியாகவும், 12,500 பேரை சிட்டி பேங்கின் சிட்டி குரூப் குளோபல் சர்வீஸஸ் பிரிவில் இருந்தும் சேர்க்கவுள்ளது. இந்தப் பிரிவை சமீபத்தில் டிசிஎஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இன்போசி்ஸ் நிறுவனமும் மேலும் 18,700 பேரை சேர்க்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

சத்யம் சாப்ட்வேர் நிறுவனம் முன்பு திட்டமிட்டபடி 15,000 பேருக்குப் பதிலாக 8,000 பேரை மட்டும் புதியாக பணியில் சேர்க்கவுள்ளது.

கேப் ஜெமினி நிறுவனம் தனது ஊழியர் எண்ணிக்கை இந்த நிதியாண்டில் ஊழியர்களின் எண்ணிக்கையை 21,000 ஆக உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதி்ல் 25 முதல் 35 சதவீதம் வரை புதிதாக சேர்க்கப்படவுள்ள ஊழியர்கள் ஆவர்.

இதற்கிடையே வெளிநாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது இந்தியக் கிளைகளை விரிவாக்க திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் மருந்துத் தயாரிப்புப் பணிகளில் அதிக அளவில் பணம் மிச்சமாவதாலும் மிகச் சிறந்த நிபுணர்கள், ஊழியர்கள் கிடைப்பதாலும் இந்த முடிவுக்கு வந்துள்ளன.

அமெரிக்காவின் மெர்க், பிஷர், கிளாஸ்கோ ஸ்மித்கிளைன், பிரிட்டனின் ஜிஎஸ்கே பார்மா, ஸ்விஸ் நாட்டின் நோவார்டிஸ் ஆகியவை புதிய மருந்துகளைத் தயாரிக்கும் திட்டங்களுடன் உள்ளன. இதன்மூலம் இந்த நிறுவனங்கள் சுமார் 3,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளன.

இத்தனைக்கும் பிஷர் நிறுவனம் உலகம் முழுவதும் தனது 10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டுமே புதிதாக ஊழியர்களை சேர்க்கவுள்ளது.

நன்றி – தட்ஸ் தமிழ்

Advertisements

1 பின்னூட்டம்

  1. ஜனவரி 30, 2009 இல் 7:00 பிப

    இக்கட்டுரையின் மூலம் இது பற்றிய ஏராளமான செய்திகளை அறிந்துகொண்டேன். நன்றி!

    – கிரிஜா மணாளன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: