சபாஷ் இந்தியா

மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் ஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டிக்கு ந்தியா தகுதி பெற்றுள்ளது.

மலேசியாவிற்கு எதிராக  நடைபெற்ற போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இதன் மூலம் 6 போட்டிகளில் 4-ல் வென்று 12 புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்தைப் பிடித்ததால் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது.

14 புள்ளிகளுடன் ஏற்கனவெ முதலிடம் பிடித்துள்ள அர்ஜெண்டீனா அணியை இந்திய அணி இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது.

10 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 3 வது இடத்தில் உள்ளது.

இந்த போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்‌திய அணி, ஆட்டத்தின் துவக்கம் முதலே அபாரமான கள உத்திகளுடன் வேகமாக ஆடியது.

ஆட்டம் துவங்கிய முதல் 20 நிமிடங்களிலேயே, இந்திய அணி 2 கோல்களை அடித்தது. முதலில் பெனால்டி பகுதிக்கு சற்று வெளியே கிடைத்த ஃப்ரீ ஹிட்டை சந்தீப் சிங் அபாரமாக அடிக்க அது கோலாக மாறியது.

அடுத்த சில நிமிடங்களிலேயே 2 வது வாய்ப்பை பெற்றது இந்தியா. இம்முறை மலேசியா பெனால்டி பகுதியில் முறையற்ற விதத்தில் ஆடியதால் இந்தியாவிற்கு பெனால்டி ஸ்ட்ரோக் அளிக்கப்பட்டது.

இதனை சந்தீப் சிங் கோலாக மாற்றினார்.இடைவேளயின் போது இந்தியா 2- 0 என்ற கோல்கணக்கில் முன்னணி வகித்தது.

இடைவேளைக்குப் பின்னரும் இரண்டு பெனால்டி வாய்ப்புகளை இந்தியா பெற்ற போதிலும், அதனை கோல்களாக மாற்ற முடியவில்லை.

இந்நிலையில், ஆட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்க நெருங்க மலேசிய அணியினர் ஆக்ரோஷமாக விளையாடத் துவங்கினர். அவர்களுக்கு 3 முறை பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் 2 முறை கோட்டை விட்டனர்.

ஆனால் கடைசியாக கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றும்போது இந்தியா ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: