வரவேற்போம் திருநங்கையை…

தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரேமாதிரியான விண்ணப்பப் படிவம் வழங்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தில் பாலினம் என்ற இடத்தில் அரவாணிகளுக்கு ‘திருநங்கைகள்’ என முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகளில் உயர்த்துவதற்காக பல்கலைக்கழக மானியக்குழு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக எல்லா கலை, அறிவியல் கல்லூரிகளிலும் தெரிவுமுறை மதிப்பீட்டு திட்டம் (சி.பி.சி.எஸ்) என்ற புதிய திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுத்த கல்லூரி கல்வி இயக்குநர் நளினி ரவீந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையி்ல் விண்ணப்பப் படிவங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  புதிய விண்ணப்ப மாதிரி அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டது.

இதில் பிளஸ்டூ தேர்வில் பகுதி-3 பாடத்தில் எடுத்த மதிப்பெண்களை 800க்கு மாற்றி குறிப்பிடவேண்டும். புதிய இட ஒதுக்கீடு கொள்கைப்படி கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் ஆகிய பிரிவுகள் தனியாக குறிப்பிட வேண்டும்.
மாணவர்களின் புகைப்படம் ஒட்டுவது உள்பட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பத்தில் பாலினம் பற்றிய விவரம் குறிப்பிடும் இடத்தில் ஆண், பெண் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக ‘திருநங்கை’ (அரவாணிகளுக்காக) என்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அறிவியல், கலை, வணிகவியல் என ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் வாங்கத் தேவையில்லை.

Advertisements

2 பின்னூட்டங்கள்

 1. மே 14, 2008 இல் 10:54 முப

  தொடர்ந்து தமிழக அரசு செய்து வரும் நலத்திட்டங்களில், சமூக மாற்றத்துக்கான பணிகளில் இதுவும் ஒன்று.

 2. மே 14, 2008 இல் 12:48 பிப

  பகுத்தறிவுக்குப் புறம்பான அரவாணிகள் என்ற வார்த்தையை விடவும் திருநங்கை என்கிற வார்த்தையை உளமாற வரவேற்கிறேன்.

  ஒவ்வொரு முறை ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு ரயிலில் வரும்போதும் பேசின் பிரிட்ஜ் நிலையத்தில் சில திருநங்கைகள் ஒவ்வொருவரிடமும் சில்லரைகளை இரந்து வாங்கும் காட்சியைக் கண்டுள்ளேன். சில்லரை வழங்காதவர்களை கேலி செய்யும்போது கோபமாகக் கூட வரும்.

  ஆனால் இந்த சமூகம் (நான் உள்பட) அவர்களிடம் காட்டுகிற வக்கிரம்தான் கோபமாக உருமாற்றமடைந்து அவர்களிடமிருந்து இவ்வாறாக வெளிவருகிறதோ என்று தோண்றும்போது கோபம் விலகி குற்ற உணர்வுதான் மிஞ்சுகிறது.

  பாதிக்கப்பட்ட பலருடைய கோபத்துக்கும், மனசாட்சியுள்ள சிலருடைய குற்ற உணர்வுக்கும் விடை கொடுக்க இந்த தொடக்கம் நிச்சயம் கை கொடுக்கும்.

  இதற்கு முன்பு நான் பணிபுரிந்த அலுவலகத்தின் மணிலா கிளையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இணையாக திருநங்கையரும் பணிபுரிவதை அங்கு சென்று வந்த நண்பர் ஒருவர் கூறினார்.

  இந்த மாற்றத்தின் வாயிலாக இந்தியாவிலும் அது நிகழும் என்று உறுதியாக நம்பலாம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: