சென்னை super kings அபாரம்

சென்னையில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 208 ரன்களை குவித்தது.
ஹெய்டேன் அபாரமாக ஆடி 81 ரன்களை குவித்தார்.

தோனியும், ரேய்னவும் தங்கள் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கடின இலக்கு என்று எதிர்பர்க்கப்பட்டாலும் மும்பை அணி சிறப்பாக விளையாடியது.

ஆட்டத்தின் இறுதி ஓவர் வரை, வெற்றி யாருக்கு என்பதில் குழப்பம் நீடித்தது.

ஆனால், சென்னை வீரர்கள், அபாரமாக பந்து வீசி, மும்பை அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.

இதனால், அந்த அணி 202 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் 2 வது வெற்றியை சென்னை அணி ருசித்தது.

ஹெய்டனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

மொத்தத்தில், சென்னை ரசிகர்களுக்கு, விருந்தளிக்கும் வகையிலேயே இந்த போட்டி அமைந்தது என்றால் அது மிகையில்லை.

Advertisements

1 பின்னூட்டம்

  1. மே 1, 2008 இல் 3:59 பிப

    டோனியை ஆறு கோடிக்கு ஏலம் எடுத்தது ஏன் என்று இப்போது புரிகிறதா? டோனியின் அணியை எதிர்த்து எந்த வீரர் சிறப்பாக ஆடினாலும் அவர்களுக்கு தேசிய அணியில் நிச்சயம் ஆபத்து காத்திருக்கிறது. இனி இந்திய அணி பெறப்போகும் வெற்றிகளும் வட்டார வாரியாகவே பார்க்கப்படும். தேசிய அணியில் சிறப்பாக ஆடிய வீரர்கள் ஐ.பி.எல்.லின் எந்த வட்டாரத்துக்காக ஆடுகிறார்களோ அந்த வட்டாரம் மட்டுமே சம்பந்தப்பட்ட வெற்றியைக் கொண்டாடும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: