பல்டி பாகிஸ்தான்

beach_wideweb__470x3040

மும்பை மீது யங்கரவாதத் தாக்குதல் நடத்திய அஜ்மல் கஸாப் உள்ளிட்ட பயங்கரவாதிகள் டல் வழியாக இந்தியாவுக்கு வந்தனர் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலை ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு டற்படை திடீரென தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் கடற்படை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” மும்பைத் தாக்குதலுக்காக பயங்கரவாதிகள் பயன்படுத்திய கடல் வழித்தடம் குறித்து தங்களிடம் எந்தவித ஆதாரமும் இல்லை. அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் உள்துறை அமைச்சகத்திடம்தான் உள்ளது.

எனவே, இவ்விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்ட தகவலை பாகிஸ்தான் கடற்படையும் ஏற்றுக்கொள்வகிறது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கராச்சியிலிருந்து படகு மூலம் கஸாப் மும்பை வந்தடைந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், கடல் வழியாக பயங்கரவாதிகள் இந்தியா வந்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை என கடற்படைத் தளபதி அட்மிரல் நோமன் பஷீர்  கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
நன்றி – யாஹூ

மறுமொழியொன்றை வழங்குக