சிறைச்சாலை. …

தவறு செய்த மனிதர்களை நல்வழிப் படுத்துகிற இடம்.
இதுதான் இதுவரை நாம் அறிந்த உண்மை.
ஆனால், வேறு ஒன்றும் உள்ளது.
ஒரு முறை சிறை அனுபவத்தை உணர்ந்தவர்கள் இனி அங்கு செல்வதை நெனைக்க மாட்டார்கள். இதனை நேற்றுதான் (15-02-2009) நான் உணர்ந்தேன்.
சென்னை சென்ட்ரல் எதிரே உள்ள பழைய மத்திய சிறைச்சாலையை நேற்றுத்தான் கண்டேன்.

கைதிகளாக உள்ளே செல்வோர் வெளியில் வரும்போது திருந்தி மனிதர்களாக வருவார்கள் என்பது, சிறையை கண்டபோது உணர முடிந்தது.
சிறைச்சாலைகள் இப்படி இருந்தால்தான் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறையும்.
அதனால் எனது வேண்டுகோள்,
தயவு செய்து, இந்த சிறைச்சாலையை இடித்து விடக்கூடாது . நிச்சயம் அதனை எல்லோரும் காண வேண்டும். தவறு செய்தால் எப்படி சிறைவாசம் இருக்கும் என்பதை உணர வேண்டும்.

இதுவே தெருவோரபித்தனின் அவா..