
ஜப்பானில் கூடியுள்ள உலகின் மிக அதிகமான எரிபொருள் நுகர்வோராக அமைந்திருக்கக்கூடிய ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள், எரிபொருள் விலையில் மானியம் வழங்கும் வழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக நாடுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரியுள்ளன.
ஆனால் எரிபொருட்களை சலுகை விலையில் விற்பது என்பதை தங்களால் விரைவில் நிறுத்திவிட முடியாது என்று இந்தியாவும் சீனாவும் கோடிட்டு காட்டியுள்ளன.
வெள்ளிக்கிழமையன்று மட்டும் உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை 11 டாலர்கள் விலை அதிகரித்தது. இந்த 8 சதவீத விலையேற்றம்தான் இதுவரை ஒருநாளில் ஏற்பட்ட மிகப் பெரிய விலையேற்றம் ஆகும்.
இந்நிலையில் உலக எரிசக்தி உற்பத்தியில் பாதி அளவை பயன்படுத்துகின்ற நாடுகளான அமெரிக்கா சீனா இந்தியா ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் ஜப்பானில் சந்தித்துள்ளனர்.
வளர்ந்துவரும் நாடுகளில் ஏழை மக்கள் மீதான செலவுச் சுமையை குறைக்கும் விதமாக அங்கெல்லாம் எரிபொருட்கள் விலை மீது அரசாங்கம் அதிக மானியங்களை வழங்கி சலுகை விலையில் எரிபொருட்களை விநியோகம் செய்கிறது. இந்த மானியங்களை படிப்படியாக குறைத்து எரிபொருள் தேவையைக் குறைக்க வேண்டும் என்பது தற்போதைய சூழலில் அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டு இந்த ஐந்து நாடுகளும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
ஆனால் இந்த மானியக் குறைப்பை எவ்வளவு வேகமாக மேற்கொள்ள வேண்டுமென்பதில் இந்த நாடுகள் இடையில் கருத்து வேற்றுமை நிலவுகிறது. தவிர மானியங்களை முழுமையாக அகற்றுவது என்பது தொடர்பில் உடன்பாடு இல்லை என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சந்தை நிலவரத்தினால் மட்டும் நிர்ணயிக்கப்படும் விலையை கொடுத்து எரிபொருட்களை வாங்கும் நிலையில் தங்கள் நாட்டு மக்கள் இல்லை என்று இந்தியப் பிரதிநிதி இச்சந்திப்பில் தெரிவித்துள்ளார். சீனாவும் கூட மானியங்களைக் குறைப்பதென்பதற்கு காலக்கெடுவெதுவும் தங்களுக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
பாலாஜி சொன்னது,
ஜூன் 8, 2008 இல் 7:55 பிற்பகல்
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி. ஆனால் தெளிவாக விரிவாக தெரிவித்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். மேலும் பொருளாதாரத்தில் மேல் இருக்கும் உங்களின் ஆர்வத்தை பாராட்டுகிறேன்.