ரஹ்மானுக்கு மேலும் ஒரு மகுடம்

 தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, இசையில் இந்தியாவின் புகழை உலகுக்குப் பரப்பிவரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இதோ மேலும் ஒரு மகுடம்…

இசைத்துறையில் பல்வேறு விருதுகளைக் குவித்த ரஹ்மானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கெளரவிக்கவுள்ளது, இன்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடெமி.

பேங்காக்கில் வரும் ஜூன் 6-ம் தேதி நடைபெறவுள்ள விழாவில், இவ்விருது வழங்கப்படவுள்ளது.

இவ்விழாவில் ஷாரூக்கான், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.

இந்திய திரைப்பட இசையை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றதைக் கருத்தில் கொண்டும், இசையில் சர்வதேச அளவில் முத்திரைப் பதித்தமைக்கும் இவ்விருதை, ரஹ்மானுக்கு அளிப்பதாக இன்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடெமி அறிவித்துள்ளது.

பொதுவாக, கலைத்துறையில் ஐம்பது வயதுக்கு மேல்தான் வாழ்நாள் சாதனையாளர், ஆனால் இந்தப் பெருமையை 43 வயதுக்குள்ளேயே பெறுகிறார் ரஹ்மான்.