எல்காட்டின் முயற்சிக்கு பாராட்டு

சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மலிவு விலையில் ஒரு லட்சம் நோட்புக்(லேப்டாப்) கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படும் என்று எல்காட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து எல்காட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.21000 வரையிலான விலையில் ஒரு லட்சம் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது.

320 ஜிபி ஹார்ட் டிஸ்க், 2 ஜிபி ராம், டிவிடி ரைட்டர், 15.4 அங்குல மானிட்டர், மோடம், புளூ டூத், வெப் காமிரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கம்ப்யூட்டர் வழங்கப்படும். கம்ப்யூட்டர் வாங்க விரும்பும் மாணவர்கள் நேரடியாக எல்காட் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

எல்காட்டின் இந்த அறிவிப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். – தெருவோரப்பித்தன்