எம். பி. க்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைகள்

 

மக்களவை எம்,பி.,க்கள் பின்பற்ற வேண்டிய 9 கட்டளைகளை, பார்லிமென்ட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

இந்த கட்டளையை படித்தால் சிரிப்புத்தான் வருகிறது..

முதல் கட்டளை

எம்.பி.க்கள் தங்கள் எடுக்கும் முடிவுகள் மற்றும் பொது மக்கள் நலனுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்

இரண்டாம் கட்டளை

எம்.பி.க்கள் மேற்கொள்ளும் பொது நடவடிக்கைகளில், தங்களுக்கு உள்ள தனிப்பட்ட நலனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தனிப்பட்ட நலனால், போது நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை தீர்க்க முற்பட வேண்டும்.

கட்டளை எண் 3

வெளியாட்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, எவ்வகையான நிதி சலுகை அல்லது பிற சலுகைகளைப் பெறக் கூடாது. சலுகைகளை பெறுவதன் மூலம், எம்.பி.க்குரிய கடமைகளை சரிவர செய்ய இயலாது.

கட்டளை எண் 4

எம்.பி.க்கள் தனிப்பட்ட கடமைகளை மேற்கொள்ளும்போது, அந்த கடமைகளின் தரத்தை ஆராய்ந்து, தேர்வு செய்து மேற்கொள்ள வேண்டும்.

கட்டளை எண் 5

எம்.பி.க்கள் தாங்கள் எடுக்கும் முடிவுகளில், முடிந்த அளவுக்கு வெளிப்படையான தன்மையை மேற்கொள்ள வேண்டும். அந்த முடிவுகள் ஆய்வுக்கு உட்படும்போது அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

கட்டளை எண் 6

நாடாளுமன்றத்தின் பொது நம்பிக்கையைக் கடைப்பிடித்து, அதை வலுப்படுத்த உதவ வேண்டும்.

கட்டளை எண் 7

எம்.பி.க்கள் முடிவுகள் எடுக்கும் போது, பொறுப்புனர்வுக்கான கொள்கையை பின்பற்ற வேண்டும். அவர்களின் முடிவுகள், அலட்சியப் போக்கில் இருக்கக் கூடாது. அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து அதன் பிறகே, முடிவுகளை எடுக்க வேண்டும்.

கட்டளை எண் 8

எம்.பி.க்கள் எப்போதும் முடிவுகள் எடுக்கும்போது, பொது நலனுடன் செயல்பட வேண்டும். தனக்கோ, குடும்பத்தினருக்கோ, நண்பர்களுக்கோ, நிதி ஆதாயமோ, பிற ஆதாயமோ கிடைக்கும் வகையில் முடிவுகளை எடுக்கக் கூடாது.

கட்டளை எண் 9

மேற்கூறிய கொள்கைகளுக்கு எம்.பி.க்கள் தங்களது தலைமை பண்பு மற்றும் முன் உதாரண தன்மை மூலம் ஆதரவு தெரிவித்து, அவற்றை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும். இவ்வாறு ஒன்பது கட்டளைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நீங்களே சொல்லுங்கள், இதை படிக்கும்போது உங்களுக்கே சிரிப்பு வருகிறதுதானே.

ஆனால் இந்த கட்டளைகள் நிறைவேரற்றப்பட  வேண்டும்.

இதுவே தெருவோரப்பித்தனின் விருப்பம்.