சென்னையில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 208 ரன்களை குவித்தது.
ஹெய்டேன் அபாரமாக ஆடி 81 ரன்களை குவித்தார்.
தோனியும், ரேய்னவும் தங்கள் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கடின இலக்கு என்று எதிர்பர்க்கப்பட்டாலும் மும்பை அணி சிறப்பாக விளையாடியது.
ஆட்டத்தின் இறுதி ஓவர் வரை, வெற்றி யாருக்கு என்பதில் குழப்பம் நீடித்தது.
ஆனால், சென்னை வீரர்கள், அபாரமாக பந்து வீசி, மும்பை அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.
இதனால், அந்த அணி 202 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் 2 வது வெற்றியை சென்னை அணி ருசித்தது.
ஹெய்டனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
மொத்தத்தில், சென்னை ரசிகர்களுக்கு, விருந்தளிக்கும் வகையிலேயே இந்த போட்டி அமைந்தது என்றால் அது மிகையில்லை.
