சிறப்பு பொருளாதார மண்டலங்களால் நன்மையா?

                

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதால் நாட்டின் தொழில் முன்னேற்றம் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று கருதும் நிலையில் , இன்று நான் படித்த புத்தகம் ஒன்றில், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமையும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. நான் படித்து வியந்ததை, நீங்களும் படித்துப் பரவசமடையுங்கள்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான விதிமுறைகள்

1.  தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்தத் தேவையில்லை.

2.  இந்திய அரசின் எந்த சட்டமும்  இதனை  கட்டுப்படுத்தாது

3.  தொழிலாளர்களின் வேலை அளவு, நேரம், ஊதியம் ஆகியவற்றை நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

4.  யாரையும் வேலையில் இருந்து நீக்கவும், சேர்க்கவும் நிறுவனங்களுக்கு அதிகாரம் உண்டு.  இதற்கு எதிராக வழக்கும் போட முடியாது.

5. சுற்றுச் சுழலைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.

6. அரசு அனுமதியின்றி ஏற்றுமதி, இறக்குமதி செய்து கொள்ளலாம்.

7. தங்கள் உற்பத்திக்கு தாங்களே தரச் சான்றிதழ் வாங்கிக் கொள்ளலாம்.

8. அரசு அனுமதி பெறாமல் வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வரலாம்.

9. மொத்த லாபத்தையும் வெளிநாடுகளுக்கு அனுப்பலாம்.

10. ஏற்றுமதிக்கு சுங்கவரி கிடையாது.

11. எந்த வரியும் கிடையாது என்பதுடன் ஐந்து ஆண்டுகளுக்கு நூறு சதவீத வருமான வரி விலக்கு

12. வணிகம் மற்றும் தொழிலுக்கு வரி இல்லாத பகுதியாக இந்த மண்டலங்கள் அறிவிக்கப்படும்.

13. ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வரை வெளிநாட்டு வணிக வங்கிக் கடன்களை நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளலாம். அரசின் அனுமதி அதற்குத் தேவையில்லை.

14. லாபத் தொகையை, வெளிநாட்டு நாணயமாக இங்கேயே வைத்துக் கொள்ளலாம்.

15. பொருளாதார மண்டலங்களை கட்டித் தரும் கட்டுமான நிறுவனங்களுக்கும் பத்தாண்டுகளுக்கு முழு வருமானவரி விலக்கு உண்டு.

தெருவோரப்பித்தனின் கேள்வி.

இந்த நிபந்தனைகளால் யாருக்கு லாபம்? வெளிநாட்டு நிறுவனங்களுக்கா? அல்லது இந்திய அரசுக்கா?

ஆராய்ந்து நோக்கினால் இதற்கான விடை புரியும். ஆனால் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் நன்மையா அல்லது தீமையா என்பது எனக்கு புரியவில்லை. இந்த நிபந்தனைகளை பார்க்கும்போது, ஒன்றை மட்டும் என்னால் கூற முடியும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க வெளிநாட்டு நிறுவனங்களை அழைப்பதை விட, கூடுதலாக சலுகைகளை வழங்கி உள்நாட்டு தொழில் முதலீட்டாளர்களையும், புதிய தொழில் வல்லுனர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் நிச்சயம் நாம்தான் தொழில் வளர்ச்சியில் மற்றவர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இருப்போம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இது தெருவோரப்பித்தனின் சொந்த கருத்து.