சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் சரவணன் மற்றும் ரவீந்திரன் ஆகிய இருவர் புகார் மனு ஒன்றை அழித்துள்ளனர். தங்களுக்கு சொந்தமான வலைப்பூக்களில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் தங்களை மிரட்டும் வகையில் தங்களது பெயரை ஓட்டிய வலைப்பூவை ஆரம்பித்து அதில் அருவருக்கத்தக்க கருத்துக்களை எழுதி அதில் தங்களது புகைப்படங்களையும் இணைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தங்கள் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் செயல்படும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களது மனுவில் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தெருவோரபித்தனின் கேள்வி :
மலேசிய நபருக்கு ஏன் இந்த வேலை?
வலைப்பூ என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை . அதில் தலையிட மற்றவருக்கு உரிமை இல்லை. இந்த புகார் உண்மையாக இருந்தால், நிச்சயம் மலேசிய நபர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நடவடிக்கை குற்ற செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
