சென்னையைச் சேர்ந்த பள்ளி சிறுமி ஒருவரை கடத்திய போலி பாதிரியாரை 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்த சென்னை போலீசாருக்கு சபாஷ் .
சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் சிறுமி ரூபியா. 2ம் வகுப்பு சிறுமியான அவர் நேற்று முன்தினம் மாலை மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்
ரூபியாவின் தந்தையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் 15 லட்ச ரூபாய் கொடுத்தால் குழந்தையை விடுவிப்பதாக மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். இதையறிந்த கடத்தல் காரர்கள் சிறுமியை செங்குன்றத்தை அடுத்த காவாங்கரையில் விட்டுவிட்டு தப்பி விட்டனர்.
சிறுமியை மீட்ட போலீசார் ரூபியாவின் தந்தையின் தொலைபேசிக்கு வந்த அழைப்புகளை சோதனை செய்ததில் பிரேம் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். தனக்கு ஏராளமான கடன்கள் இருந்ததாகவும் அதனாலேயே குழந்தையை கடத்தியதாகவும் விசாரணையில் பிரேம் ஒப்புக் கொண்டார்.
பிரேமை கைது செய்த போலீசார் கடத்தலில் தொடர்புடைய மற்ற மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தெருவோரப்பித்தனின் கருத்து: சிறுமியை 24 மணி நேரத்திற்குள் மீட்ட சென்னை போலீசாருக்கு பாராட்டுக்கள். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்பதே தெருவோரபித்தனின் கோரிக்கை .
