உளவுத்துறை எச்சரிக்கை

                  fpn042.jpg 

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ 400 பயங்கரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. மலைகளில் உள்ள பனி உருகியதும் அவர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ உள்ளனர். பாகிஸ்தான் – இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தையில் பயங்கரவாதிகளுக்கு நம்பிக்கை இல்லை. கடந்த ஆண்டில் 535 முறை இந்தியாவுக்கு பயங்கரவாதிகள் ஊடுருவினர். இவ்வாண்டு இதுவரை 22 முறை மட்டுமே ஊடுருவி உள்ளனர்.  சமீப காலத்தில் ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் அவர்களது தாக்குதல் முறையில் மாற்றத்தை காட்டுகிறது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் உதவிகளைப் டிபற்று வரும் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ தயார் நிலையில் உள்ளனர்.  இவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள். 10 சதவீதம் பேர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள். பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.  இதனால் அவர்கள் தாக்குதல் குறித்த வியுகங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருந்தாலும ஐ.எஸ்.ஐயின் போக்கில் எந்த மாற்றமும் தென்படவில்லை. பயங்கரவாத அமைப்புகள் முறைப்பழ செயல்படும் அமைப்பாக வலுப்பெற்றுள்ளன. ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை.  அதிநவீன கருவிகளை கையாளக்கூடியவர்கள் அதிகரித்துள்ளனர். தற்போது இந்தியாவில் ஊடுருவும் பயங்கரவாதிகள் இந்தியாவில் இருப்பவர்களுக்கு தங்கள் இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். தேவையின்பொது இவர்களை தாக்குதலுக்கு பயன்படுத்திக் கொள்ள உள்ளனர். முக்கியமான இடங்கள் வி.ஐ.பிக்கள் அரசியல் தலைவர்கள் அதிகளவில் மக்கள் நடமாட்டம் உள்ள பொது இடங்களில் தாக்குதல் நடத்துவது தான் பயங்கரவாதிகளின் முக்கிய குறியாக உள்ளது.

நன்றி – தினமலர்