ஆக்ரா அருகே 45 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை வந்தனா 27 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ராணுவ உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டது. உடனடியாக அக்குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. தற்போது குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை மீட்புப்பணி வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து குழந்தையின் பெற்றோரும் ஆக்ரா மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
